Saturday, October 15, 2011

தேர்வு




எதில் தேறினாய் ?
பண்பிலா ?
பட்டறிவிலா ?
ஒற்றுமையிலா ?
ஒழுக்கத்திலா ?
அன்பிலா ?
ஆற்றலிலா ?

எதில் தேறினாய் ?

இரு குறட்பா,நான்கு கேள்விகள்
பொருளறியாமல் மனனம்
செய்தலே தேர்ச்சியா ?
படம் வரைந்து பாகம் குறித்தலும்
உதவிப் படம் வரைந்து வடிவியல்
செய்தலுமே தேர்ச்சியா ?
அது தெரியாததால்,

எட்டிப் பார்த்தாய் ,எழுந்து நின்று
பார்க்க முயன்றாய்
எழுதிக் கொண்டு வந்திருந்த
நுண்ணெழுத்து விடையில் கேட்டிருந்த
கேள்விக்கான விடையில்லை எனினும்
விடவில்லை நீ! அதையே எழுதினாய்
தாளை மாற்றி எழுதிப் பார்த்தாய்!
ஆளை மாற்றியும் எழுதிப் பார்த்தாய்!
எதில் தேறினாய் நீ ?

2 comments:

Yaathoramani.blogspot.com said...

தேறாதவன் (பயனற்றவன் ) குறித்து
தாங்கள் படைத்துள்ள பதிவு அருமை
அதிலும் ஈற்றடி மிக மிக அருமை
கவிதைக்கு அதிக ஆழம் கொடுத்துப் போகிறது
தாமதத்திற்கு மன்னிக்கவும்
தங்கள் பதிவிடும் போது முடிந்தால் என்னுடைய
இ.மெயிலுக்கு ஒரு தகவல் தரவும்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Suresh Subramanian said...

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com