Saturday, July 16, 2011

கர்ம வீரர்


மனதில் மலர்ந்திட்ட மலர்களை
கவிமாலையாக்கி காணிக்கையாக்குகின்றேன்
கர்ம வீரனின் கமலபாதங்களிலே

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு முத்திரைச்சொல்
கர்ம வீரன்-ஒரு
கறுப்பு மனிதன் கர்மவீரன் ஆனகதை கேளுங்கள்
காமராசரே,நீர் பிறக்குமுன்பே விருது
கிடைத்து விட்டதே,உந்தன் மண்ணுக்கு!
நீ அங்கே அவதரிக்கப் போவதை
அறிந்தா?அல்லது அறிவிக்கவா?

இராசாசியின் எழுத்து,
அண்ணாவின் பேச்சு,
அம்மையின்ஆங்கில வளம்
கலைஞரின் தமிழ்ப்புலமை
இத்திறம் ஏதும் இல்லாது
எத்திறத்தில் நீ வென்றாய்?
காலங் கடந்து நின்றாய்?

மணம் புரிந்திடவில்லை-மக்களின்
மனம் புரிந்ந்திட்டாய்
மதிய உணவு தந்தாய்
மகத்தான தலைவனானாய்-மாணவரின்
கல்விக் கண்ணைத் திறந்தாய்
காலங்கடந்து நின்றாய்
அணுவிஞ்ஞானியின் ஆற்றலும்
பாரிஸ்டரின் பண்பு நலனும் கொண்ட
கறுப்பு காந்தியே,
பாரதம் போற்றும் தலைவனே,
சாதனை நாயகன் உன்னைச் சிலர்
சாதிச் சிறையில் அடைத்திட்டாலும்
மழைத்துளி பருகிய சக்கரவாகம் நீ
மக்களின் தலைவனல்லவா?

சிவகாமி மகனிடம் சேதி சொல்லச் சொல்லி
கவியரசு சொன்னவை
கொட்டிலிலே தோன்றிக் குவலயத்தில் பேரெடுத்து
இட்டமுடன் சேர்ந்தோர்க்கு இறைவனாய் தோற்றமுற்ற
ஏசுபிரான் மேற்றிசையில்!
இளைப்பிரான் கீழ்த்திசையில்!
சத்தியமே தெய்வம் சமத்துவமே வாழ்க்கையென
இத்தரையில் ஓர் நாள் இளவரசாய் வந்துதித்த
புத்தபிரான் நேபாளம்!புனித பிரான் விருதுநகர்!

மென்மையான தலைவனின் மேன்மை உரைக்க
இதைவிடச் சான்றும் வேண்டுமோ?
                                                                                        (மீள் பதிவு)

5 comments:

Yaathoramani.blogspot.com said...

கர்ம வீரர் குறித்து கர்ம சிரத்தையுடன்
எழுதப்பட்ட கவிதை அருமை
மீள்பதிவாகினும் மீண்டும் மீண்டும்
படிக்க இனிக்கும் கவிதை
உங்கள் அனைத்துப் பதிவுகளையும்
படிக்க இப்பதிவு. ஆர்வம் உண்டாக்கிப் போகிறது
இவ்வாரத்தில் அனைத்தையும் படித்து முடிக்க உத்தேசம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

ஞானம் நிறைந்த ரமணி சாரின் கருத்துக்காகத் தானே இந்த மீள்பதிவு.

Yaathoramani.blogspot.com said...

மார்ச்வரை படித்துவிட்டேன்
தொடர்ந்து படித்து வருகிறேன்
நீங்கள் சொல்லியுள்ள
திருத்தம் செய்துவிடுகிறேன்.நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிதைகள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன்
தங்கள் பரந்து பட்டசமூக சிந்தனைகள் பிரமிப்பூட்டின
ஆயினும் அதிகம் பேரை ஏன் சென்றடையவில்லை
என்ற எண்ணம் என்னுள் தொடர்ந்து கொண்டே இருந்தது
ஒருவேளை அதிகமாக பிறர் பதிவுகளை பார்க்கவும்
பின்னூட்ட மிடவும் நேரமின்மை காரணமாக இருக்கலாம்
எனத் தோன்றுகிறது
அந்த எண்ண பாதிப்பே ஒரு கவிதைகான கருவைத் தந்தது
அதையே விதைப்பதே நூறாய் ஆயிரமாய் என்ற
ஒரு படைப்பாக கொடுத்துள்ளேன்
நேரமிருப்பின் படித்து தங்கள் கருத்தை
பதிவிட்டால் மகிழ்ச்சி கொள்வேன்

Yaathoramani.blogspot.com said...

தங்கள் பின்னூட்டப் பாராட்டைவிட
பதிவிடுவீர்கள் ஆயின்
இன்னும் மகிழ்வு கொள்வேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து