Monday, July 11, 2011

அரசியல் அல்ல.....ஆனால்?

                                         எத்தனை  நாள்  இணைப்புப் பயிற்சி  கொடுப்பது?அந்தோ பரிதாபம்...அறியாப்  பிள்ளைகளில்லை,ஆசிரியப்  பெருமக்கள்.என்ன  செய்வது?
பத்துப்  பக்கங்களை  வைத்துக்  கொண்டு  பதினைந்து  நாள்  ஓட்டியாயிற்று.
                                                              இன்னும்  எத்தனை  நாட்களோ?தெரியவில்லை.
வாய்த்ததொரு  வாய்ப்பு  என்று  எண்ணிக்  கொண்டு  தமிழ் இணையம் அறிமுகம்  என்று  பாடக் குறிப்பில்  எழுதி விட்டு  வலைப்பூக்கள்  குறித்தும்,தேடு பொறிகள்  மூலமாக  நாம்  ஏற்கனவே   தரவிறக்கி  வைத்துள்ள   இலக்கிய  நூல்கள்  குறித்தும்  மாணவியர்க்கு  அறிமுகம்  செய்யலாம்  என்று  கணினி  அறைக்கு  அவர்களை   அழைத்துச்  சென்றால்  இணையப் பயன்பாடு  கடவுச் சொல் போட்டுப் பூட்டப் பட்டிருக்கிறது.
                                                       அலுவலக  வேலைக்காகப்  பயன்படுத்தப் படும்  அந்தக்  கணினியில்  இராணுவ ரகசியம் ஏதுமில்லை.அதைப் பயன்படுத்தும்  ஆசிரியரிடம்  நீங்களே   கடவுச்  சொல்லைப்  பயன்படுத்தித் திறந்த பின் பிள்ளைகளுக்கு  அதிக பட்சமாக ,பத்து  நிமிடம்  இணையம்  குறித்து  சொல்கிறேன்  என்றேன்.அனுமதி   மறுக்கப் பட்டது.
                                                     அரியலூர்  மாவட்டத்தில்  நடுநிலைப் பள்ளியில்  6,7  வகுப்பு  மாணவர்கள்  விக்கிபீடியாவில்  கட்டுரை  எழுதுகிறார்களாம்.பத்தாம்  வகுப்புப் பிள்ளைகள்  பாவம்  குறிப்பேட்டிலேயே  எழுதிக்  கொள்ளட்டும்  கட்டுரைகளை.காட்சிப்  பொருளாக  இருக்கும்  கணினியை  பயன்பாட்டில்  கொண்டு  வர  வாய்ப்புண்டா?
                                                          நமது  உபயோகத்திற்கு   வீட்டில்  இணைய இணைப்பு  உள்ளது.பள்ளியில்  நமது  சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப் போவதில்லை..சென்ற  ஆண்டு  இணைய மாநாட்டின் போது  நடந்த  வரைகலைப் போட்டிக்கான  பதிவை  வீட்டில்தான்  செய்தேன்.நாளொரு நூல்  குழுமத்தில் இருந்து  பெறும்  குறிப்பு  கொண்டு  கட்டுரைகள்  தயாரிக்க  உதவுகிறேன்.இதை  நாம்  செய்தாலும்,மாணவியர்க்கு  பள்ளியில் தானே  காண்பிக்க முடியும்?அரசுப் பள்ளியில்  ....?
                                           
                                 
                                                       

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆமை புகுந்த இடம் அமீனா புகுந்த இடம்
இத்தோடு பதிதாக
அரசியல் புகுந்த இடம் எனவும் சேர்த்துக் கொள்ளலாமா?
மனச்சாட்சியோடு வேலைபார்க்க நினைப்பவர்களுக்கு
இப்போது நேரம் காலம் சரியில்லை எனவே நினைக்கிறேன்
தாங்கள் முழுமையாக எதையும் சொல்ல இயலாத நிலையில் உள்ளதை
பதிவைக் கொண்டே புரிந்து கொள்ள முடிகிறது
பொறுப்புணர்வோடு எழுதப்பட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Murugeswari Rajavel said...

அரசியல் புகுந்த இடம் எனவும் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால்,இங்கு நான் குறிப்பிட்டிருப்பது தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் பள்ளியாக இருந்தாலும் அங்கு ஒரு அரசியல் களம் அமைத்து தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள்.முழுமையாகப் பதிவு செய்யாததையும் உணரும் திறன் உங்களின் தனித்தன்மை.