Friday, August 6, 2010

எல்லையில்லாப் பெருவெளி

எல்லை  கட்டிவிட்ட மனம்
ஏற்றம் பெற்றிடுமா?
தொல்லை தொலைந்திடுமா?
தொற்றித் தான் தொலைத்திடுமா?

எல்லை கட்டா எடிசனும்
அணை போடா அப்துல்கலாமும்
ஆற்றிய சாதனை கண்டு
அறிவியலுலகு வியந்த்து

பில்கேட்ஸின் மனமானது
எல்லை கட்டியிருந்தால்
எலிப்பொறிக்குள் சிக்கிச்
சிதையாதிருந்திருப்போமோ?

விஞ்ஞானத்தின் விரிவிலே
பிரபஞ்சம் சுருங்கிவிட்டது
சுருங்கிய உள்ளங்களாலே
சுற்றமெல்லாம் வெகுதூரம்

விஞ்ஞானச் சுகங்கள்
அஞ்ஞானத்தில் தள்ளிட்டதால்
மெய்ஞானம் மறந்திட்ட
தாய்மை கூட பொய்த்த்து

அகிலமே எல்லை என்று
அகம் விரியட்டும்-அதிலே
விரிசல்  விழாதிருக்கட்டும்
வியனுலகு எட்டிடுவோம்

வானமே எல்லை என-மன
வாசல்கள் திறக்கட்டும்-அதில்
வாய்ப்புகள் வந்து குவியட்டும்
வாழ்த்துக்களால் வாழ்ந்திடுவோம்

மரம் ஏறிப் பழம் பறிப்போம்
வேர்களை வீழ்த்திவிடாது
கடலிறங்கி முத்தெடுப்போம்
மூழ்கியே போய்விடாது

விரிந்த எல்லையிலே
வியனுலகு தொட்டிடுவோம்
பரந்த எல்லையிலே
பயன் அனைத்தும் எய்திடுவோம்

சாதனைகள்,சாகசங்கள்
சோதனைகள்,வேதனைகள்
சேர்ந்தியங்குவது  தானே
வாழ்க்கைப் பயணம்

விஞ்ஞானத்திலே மனம் விரித்தால்
விந்தைகள் ஏராளம்-அறிவியற்
சோதனைகள்,சோதனைகளா?
சாதனைகளா?

மெய்ஞானத்திலே அகமாழ்ந்தால்
மென்மையும்,மேன்மையும்.
விண்ஞானம் உணர்ந்து
மெய்ஞானத்தால் மேன்மையடைவோம்!!

No comments: