Sunday, June 27, 2010

எழுச்சி

ஏ மனிதா!எழுந்திரு
ஏக்கத்தை மூட்டை கட்டு
ஏற்றத்தை நிலை நாட்டு
கல்லாமை இருள் நீக்கு
கல்வி ஒளி எங்கும் ஏற்று
சோம்பலைத் தூக்கிப் போடு
சோகமும் ஓடிப் போகும்
சுகமும் தானே வந்து சேரும்

ஏ மனிதா! எழுந்திரு
நீ வளம் பெறு,மன நலம் பெறு
நாடு நலம் பெறும்-என்றும்
வளம் பெறும்!

துயருறும் தாயகத்தை நீ
தூக்கி நிறுத்த வேண்டாம்-உனைத்
தூக்கி நிறுத்த ஆள் தேடாதே!
சோர்ந்து கிடக்கும் நாட்டின்
சோர்வு போக்கிட வேண்டாம்-நீ
சோம்பிக் கிடக்காதே!

சோகங்களைக் காணப் பயந்து
சோதனையில் அல்லவா சிக்கிக் கொண்டாய்?
சோகம் கடந்த பின்னே வரும்
சுகங்களையுமல்லவா காணாது ஒளி(ழி)ந்தாய்

வெளியே வா!விரைந்து வா!
ஏ இளைஞனே! துடிப்போடு செயல்படு
துயர் துடைக்கப்படும்
வக்கிர மனம் விலக்கிடு
வச்சிர மனம் பெற்றிடு
வளமான வாழ்வு வாழ்வாய்
எண்ணங்களை உயர்த்து,ஏற்றம் பெற்றிடுவாய்

முயன்று உழைத்திடு,முன்னால் வந்திடுவாய்
உன்னால் முடியும்.....!
எழுந்து வா! செயல்பட விரைந்து வா!!

No comments: